சேலம், 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கொளுத்தும் வெயில் சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் 20 நாட்களும், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய மே மாதத்தில் 7 நாட்களும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 103 டிகிரி வரை பதிவானது. இந்த நிலையில் கத்திரி வெயில் முடிந்து ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு இல்லை. பருவமழை காலம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும். இந்த ஆண்டு முற்றிலும் அக்னி நட்சத்திர காலத் தில் இருப்பது போன்று வெயில் தற்போது வாட்டி வதைக்கிறது. 6-ந் தேதி வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவாகி இருந்தது. 10 ஆண்டுகளில். சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இந்த மாதத்தில் (செப்டம்பர்) வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறையாமல் கடந்த 2 நாட்களாக 99 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளதால் பொதுக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மதிய வேளையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருகிறது. கடும் வெப்பத்தால் வீடுகள், வணிக வளாகங்களில் குளிர்சாதனங்கள், மின் விசிறிகளின் பயன்பாடு கோடைக்காலம் போன்று அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், பழ ஜூஸ் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/salems-hottest-september-in-10-years




