சென்னை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகள், குகைகள் வழியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை ரெயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்தை யுனெஸ்கோ அமைப்பு வழங்கியுள்ளது. மலை ரெயிலில் 'பிரேக் மேன்' என்பவர்கள், பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செங்குத்தான மலைப்பாதை யில் ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய பணியாக உள்ளது. இந்த மலை ரெயிலில் ஏர் பிரேக்குகள் தவிர, பிரேக் மேன்களின் கைமுறை பிரேக் இயக்கம் மிக அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ரெயில் என்ஜின் டிரைவரின் சிக்னலுக்கு ஏற்ப, ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள தலா ஒரு பிரேக் மேன், பிரேக் சக்க ரத்தை சுழற்றி வேகத்தை கட்டுப்படுத்துவார்கள். வளைவுகள் மற்றும் குகைகளில் பயணிக்கும் போது, தண்டவாளத்தில் மரங்கள் விழுந்திருக்கிறதா, மண் மற்றும் பாறைகள் சரிந்து உள்ளதா அல்லது வனவிலங்குகள் ஏதேனும் நிற்கிறதா என்பதை கவனித்து மலைப்பாதையில் ஏதேனும் ஆபத்து தெரிந்தால், உடனடியாக ரெயிலை நிறுத்தும் அதிகாரம் பிரேக் மேனுக்கு உண்டு. இந்தநிலையில் குன்னூர்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயிலில் 5 பெட்டிகளில் பிரேக் மேன்கள் எண் ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். எனவே, பாதுகாப்பு கருதி முன்பு இருந்தது போல் பிரேக் மேன்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், மலை ரெயில் இயக்கத்தின் போது பலமுறை இரு பிரேக் மேன்களை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது 2 பிரேக் மேன்கள் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. 5 பேர் செய்யும் பணிகள், இருவர் மூலம் செய்யப்படும். இதனால் மலை ரெயிலில் பாதுகாப்பாக சென்று வர முடியும் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mountain-train-operated-between-coonoor-and-ooty-with-two-brakemen




