சென்னை, சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஐகோர்ட்டுக்கு ஐந்து வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஐகோர்ட்டுக்கு ஐந்து வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி ரஜ்னிஷ் பதியில் ரமேஷ் நடராஜன் ஜிகே முத்துக்குமார் ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் மேலும் மூன்று வழக்கறிஞர்களும் மற்றும் ஏழு நீதித்துறை அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரவீகுமார் சங்கரநாராயணன் திலீப் குமார் நடராஜன் எல்லப்பன் மனோகரன் முருகன்( நீதித்துறை அதிகாரி) சுமதி அல்லி திருமகள் சண்முகன் கார்கிகேயன் முருகேசன் பாலுசாமி குணசேகரன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-15-new-judges-to-the-madras-high-court-presidents-order




