திருவாரூர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வருகைதரவுள்ளதால் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- துணை ஜனாதிபதி பங்கேற்பு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி அன்று முழுவதும் டிரோன் கேமரா பறந்திட அல்லது செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி யாராவது டிரோன்களைப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-presidents-visit-drone-flying-banned-in-thiruvarur-on-august-17




