மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையின் சர்ச்கேட் பகுதியில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. 7 மாடிகளை கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று ஊழியர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். தீ விபத்து இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தின் தரைத்தளத்தில் இன்று மதியம் 2 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடத்தின் பிற தளங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் பலரும் சிக்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/maharashtra-income-tax-office-horrific-fire-accident




