ராஞ்சி ஜார்கண்டில் சி.ஐ.எஸ்.எப். அதிரடி நடவடிக்கையால் 200 டன்கள் நிலக்கரி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் நிலக்கரி பாதுகாப்பை வலுப்படுத்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பூஜ்ய நிலக்கரி கசிவு கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய உள்விவகார துறையின் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நிலக்கரி பறிமுதல் இந்நிலையில், ஜார்கண்டில் அதிரடி நடவடிக்கையாக மகத் மற்றும் அமராபலி பகுதிகளில் சி.ஐ.எஸ்.எப். டி.ஜி. பிரவீர் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் வீரர்கள், கடந்த 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 200 டன்கள் அளவுக்கு நிலக்கரி பறிமுதல் செய்யப்பட்டது. நீண்டகாலம் செயல்பாட்டில் இருக்கக்கூடிய நிலக்கரி மாபியா கும்பலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைக்காக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜூலை முதல் நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் டன்னுக்கும் கூடுதலான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலக்கரி கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/200-tons-of-coal-seized-cisf-raid-in-jharkhand




