பாட்னா பீகாரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பல் அதுதொடர்பான வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்தது. சிறுமியிடம் அத்துமீறிய கும்பல் பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் வசித்து வரும் பள்ளி மாணவன், தனது தோழியுடன் பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு, இரவில் திரும்பி கொண்டிருந்தபோது அவர்களை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அந்த சிறுவனை தாக்கியதுடன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது. 3 பேர் கைது இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர். மற்றொரு கொடூரம் இந்த சூழலில், பீகாரில் மற்றொரு கொடூரம் நடந்துள்ளது. ககாரியா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை 3 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனை அவர் எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், சிறுமியின் ஆபாச வீடியோ ஒன்றை எடுத்து அதனை, அவருடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இதனை அறிந்து வேதனையடைந்த சிறுமியின் தாய், ககாரியா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது. இதில் அந்த 3 பேரில் ஒருவருக்கு சிறுமிக்கு முன்பே நன்றாக தெரியும் என்றும் அவருடன் பல மாதங்களாக பழகி வந்துள்ளார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/next-horror-in-bihar-sexual-assault-on-girl-gang-shares-video




