வாஷிங்டன், உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதன்படி ரவுண்ட் ஆப் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும். இந்நிலையில், ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை பராகுவே எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக வழக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. பராகுவேக்கு எதிராக தோல்வியடைந்த ஜெர்மனி நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது. உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜெர்மனி அணி வெளியேறியதால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜூலியன் நகெல்ஸ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/german-team-coach-resigns




