சென்னை, அக்டோபர் மாதத்தின் முதல் வாரமே திரையுலகில் பல சுவாரஸ்யமான படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். "ஏழு கடல் ஏழு மலை" இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் "ஏழு கடல் ஏழு மலை" (Yezhu Kadal Yezhu Malai). இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 1ந் தேதி வெளியாக உள்ளது. "பத்தா" விஜய் சேதுபதி இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் 'பத்தா' (Baththa). இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்பம் வருகிற 1ந் தேதி வெளியாக உள்ளது. "அன்பில் அவன்" அசோக் செல்வன் தற்போது ‘அன்பில் அவன்’ (Anbil Avan) என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும். இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2ந்தேதி வெளியாக உள்ளது. "சிக்மா" முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக -சிக்மா' (Sigma) படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 2ந் தேதி வெளியாக உள்ளது. "டோண்ட் டிரபிள் தி டிரபிள்" மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் டோண்ட் டிரபிள் தி டிரபிள் (Don't Trouble The Trouble). இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். கால பைரவா இசையமைத்துள்ளார். இப்படம் மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 2ந் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. "டிக்கர்" ஆஸ்கர் வென்ற சிறந்த இயக்குநரான அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் நடிகர் டாம் குரூஸ் நடித்து முடித்த திரைப்படம் டிக்கர் (digger). இதில், வயதான முதலீட்டாளர் தோற்றத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். ஆக்ஷன் கதைகளுக்குப் பெயர் போன டாம் குரூஸ் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மூலம் ஆக்ஷன் அல்லாத ஓர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் ரிஸ் அகமது., ஜான் குட்மேன், சாண்ட்ரா ஹுல்லர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 2ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. "திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்' (Drishyam: The Conclusion). இந்த படத்தில் விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருக்கிறார். மேலும் நடிகைகள் தபு மற்றும் ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்' படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 2ந் தேதி வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/movies-releasing-in-the-first-week-of-october-which-movie-are-you-looking-forward-to-watching




