சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. அதிகரிக்கும் தங்கம் விலை இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்று விடுமுறை தினம் என்பதால தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.5 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/high-gold-prices-what-is-the-situation-today




