நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. அணை பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் யூக லிப்டஸ் மரங்கள் வெட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ரேலியா அணை நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த அணை அமைக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ரேலியா அணையில் நீர் வரத்து குறைந்ததோடு,நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. மழை பெய்யாததால், தற்போது அணை வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அணை பகுதியில் பாளம், பாளமாக வெடித்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 46.7 அடியில், 10 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் உள்ளது. இதனால் குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவதால், 5 நாட்களுக்கு ஒரு முறை 30 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years




