சென்னை, நடிகர் சத்யராஜின் மகனும், நடிகருமான சிபி சத்யராஜ், முதல்-அமைச்சர் விஜய்க்கு தொடர்ந்து தனது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் சிபி தமிழில் 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிபி சத்யராஜ், தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான '10 ஹவர்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'முதல்வர் விஜய்' புகைப்படத்துடன் இன்ஸ்டா ஸ்டோரி விஜய்யின் தீவிர ரசிகரான சிபி சத்யராஜ், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அந்த வகையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'முதல் அமைச்சர் விஜய்' சட்டமன்றத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படத்தின் பாடலையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sibi-sathyaraj-shares-chief-minister-vijays-assembly-photo-instagram-story-featuring-a-song-from-vettaikaran-goes-viral




