சென்னை, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,830 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-infection-confirmed-in-253-people-in-tamil-nadu-yesterday-alone




