தானே, ஜெராக்ஸ் கடையில் 3,400 எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்.ஐ.ஆர். படிவங்கள் மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையின் கார்கர் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான (எஸ்.ஐ.ஆர்.) படிவங்கள் அச்சிடப்படுவதாக உத்தவ் சிவசேனா தொண்டர்களுக்கு தகவல் கிடைத்தது. ஜெராக்ஸ் இதையடுத்து, அவர்கள் அந்த கடைக்கு சென்று நடத்திய சோதனையில் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி சூரஜ் பாட்டீல் என்பவர் ஆயிரக்கணக்கான எஸ்.ஐ.ஆர். படிவங்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் சூரஜ் பாட்டீலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூரஜ் பாட்டீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சஸ்பெண்ட் மேலும் ராய்காட் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஜெராக்ஸ் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பன்வெல் தொகுதிக்குட்பட்ட 11 வாக்குச்சாவடிகளுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 400 வாக்காளர் படிவங்கள் அங்கு இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த அரசு ஆவணங்கள் எவ்வாறு தனியார் கைக்கு சென்றது என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த 5 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/sir-shocker-3400-voter-forms-found-at-private-photocopy-shop-5-blos-suspended




