திருவனந்தபுரம், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார். அய்யப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியிலும் ’வீ த லீடர்ஸ்’ இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை நேற்று கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு சபரிமலைக்கு சென்ற அண்ணாமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/sabarimalai-aiyappan-kovilil-annamalai-swami-darisanam




