கொழும்பு, இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கில்கிறிஸ்ட்டை முந்திய பண்ட் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 89 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸ்ர்கள் மூலம் டெஸ்டில் அவர் அடித்த சிக்ஸ்ர்களின் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட்டை (100 சிக்ஸர்கள்) பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் 1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 138 சிக்ஸர்கள் 2. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 107 சிக்ஸர்கள் 3. ரிஷப் பண்ட் (இந்தியா) - 102 சிக்ஸர்கள் 4. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) - 100 சிக்ஸர்கள் 2-வது நாள் ஆட்டநிலை இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்துள்ளது. லஹிரு உதாரா 1 ரன்னிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கமில் மிஷாரா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/rishabh-pant-surpasses-adam-gilchrist-becomes-3rd-highest-six-hitter-in-tests




