ஆண்டனி வர்கீஸின் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படம் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகிறது. கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் 2022ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நிகில் பிரேம்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருந்தார். ஒரு கிராமத்து மக்களின் கால்பந்து விளையாட்டு ஆர்வத்தை மையமாக கொண்டு உருவான படம். இந்த படம் 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் வெளியிடுகிறார். ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படம் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகிறது. இது குறித்து தயாரிப்பாளர் டி. அசோக் கூறுமையில், “ ‘7 ஸ்டார் பாய்ஸ்’ புட்பால் சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் கால்பந்து விளையாட வேண்டும் என தீராத ஆர்வம் கொண்ட 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், உள்ளூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போது மைதானத்தில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் திறமையான விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களுடைய ரோல் மாடல் நாயகனாக கருதுகிறார்கள். அதன் பின்னணியில் கதை நடக்கிறது” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/antony-vargheses-7-star-boys-film-release-date-announced




