திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாலிபரை அரிவாளால் தாக்கியவர் கைது திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, முன்விரோதம் காரணமாக தருவை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த காளி(எ) காளிராஜ்(29) அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புலன் விசாரணை மேற்கொண்டு காளி(எ) காளிராஜை கைது செய்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் - V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ராணி நேற்று குற்றவாளிக்கு பிரிவு IPC 324-ன் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த சேரன்மகாதேவி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், முன்னீர்பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (தற்போது ஓய்வு) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு மாணிக்கராஜா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அபிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி வெகுவாக பாராட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attacked-youth-with-machete-in-tirunelveli-gets-2-years-in-prison




