சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் “வெற்றிப் பயணம்" திட்டத்தை அக்டோபர் 2- ந் தேதி அன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வெற்றிப் பயணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக. 24-ந் தேதி அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள். தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். "வெற்றிப் பயணம்" திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. சோதனை ஓட்டம் இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். மேலும், "வெற்றிப் பயணம்" பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் 25.09.2026-க்குள்ளும், சோதனை ஓட்டம் 27.09.2026 அன்றும் மேற்கொள்ளப்படும். "வெற்றிப் பயணம்" திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக். 2-ந் தேதி அன்று தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் ஜெயசீலன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vetripayan-scheme-to-start-on-october-2nd-trial-run-on-27th




