தாராபுரத்தில் அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் என்பது கருத்துக்களுக்கான களம். அந்தக் களத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக வன்முறையைத் தேர்ந்தெடுப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் நடைமுறை அல்ல. ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி, வேட்பாளர் அல்லது மக்கள் பிரதிநிதி மக்களை சந்திக்கச் செல்லும்போது, அவரை தடுத்து நிறுத்துவது, அச்சுறுத்துவது அல்லது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் ஜனநாயக அரசியலின் அடிப்படை நெறிமுறைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன. கனிமொழி சந்தோஷ் குறிப்பாக தேர்தல் காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து தங்களது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும் உரிமை உள்ளது. அதேபோல், அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கும் முழுமையான உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது. மக்களை சந்திப்பதற்கான அரசியல் களத்தை வன்முறையின் மூலம் முடக்க முடியாது. தங்களது ஆதரவாளர்களை பயன்படுத்தி மக்களை சந்திக்க விடாமல் தடுப்பதும், அவர்களை அச்சுறுத்துவதும், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அரசியல் மாண்பு அல்ல. கனிமொழி சந்தோஷ் அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அரசியல் போட்டி என்பது கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டும். தனிநபர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக மாறிவிடக்கூடாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பை மக்களிடமே விட்டுவிடுங்கள். வன்முறை மூலம் மக்களின் மனதை மாற்ற முடியாது. அச்சுறுத்தல்கள் மூலம் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது. தேர்தல் களத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை எந்த அரசியல் கட்சியும் தீர்மானிக்க முடியாது. மக்கள்தான் இறுதி தீர்ப்பை வழங்குபவர்கள். எனவே அரசியல் களத்தில் போட்டியிடுங்கள். ஆனால் வன்முறையை அரசியல் கருவியாக மாற்றாதீர்கள். ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள். மக்களின் குரலாகவும், மக்களின் உரிமைக்காகவும் த.வெ.க தொடர்ந்து ஜனநாயக களத்தில் நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/mla-kanimozhi-condemns-the-attack-on-minister-sampath-in-tharapuram




