லண்டன், தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார். லண்டன் பயணம் தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன் ஒரு பங்காக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார். அங்கு தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆய்வு மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொழில் முதலீடுகள் இதுதவிர அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் இந்துஜா, பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி.சாப்ரி உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ‘வெற்றி’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ரூ.2,500 கோடி முதலீட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் விளக்கினர். மேலும், தமிழகத்தில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், இந்த முதலீடுகள் தமிழக இளைஞர்களின் லட்சியங்களை பிரதிபலிப்பதாகவும் பிரிட்டன்-இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் முதலீடு செய்ய இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். சென்னை புறப்பட்டார் இந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இன்று(வியாழக்கிழமை) சென்னை புறப்பட்டார். முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம் ரூ.15,300 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமானம் மூலம் லண்டனில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், நாளை காலை 8 மணிக்கு சென்னை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/லண்டன்-பயணம்-நிறைவு-சென்னை-புறப்பட்டார்-முதல்-அமைச்சர்-விஜய்




