காத்மண்டு நேபாள வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் சிக்கி 1,453 பேர் பலியாகி உள்ளனர். 5,285 பேரை இன்னும் காணவில்லை. நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி இமயமலை பிராந்தியத்தில் திடீரென்று பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன. இதில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட இந்தியாவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை இரவு பகலாக மீட்கும் பணி தொடர்ந்தது. இதில் பலர் சேறு, சகதியில் இருந்து மீட்கப்பட்டனர். பல நாட்களுக்கு பின்னர் சேற்றில் சிக்கியிருந்த சிலர் மீட்கப்பட்ட அரிய நிகழ்வுகளும் நடந்தன. 1,453 பேர் பலி இந்த துயர சம்பவத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,453 என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. எனினும், அவர்களில் 112 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பெரும்பாலான உடல்கள், அடையாளம் காண முடியாத வகையில் இருந்தன. இதனால், அவற்றின் மரபணு மாதிரிகளை சேகரித்து விட்டு, புதைத்து விட்டனர். சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், 5 ஆயிரத்து 285 பேரை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? என்ற விவரம் தெரிய வரவில்லை. திபெத் பெருவெள்ள சம்பவத்தில் இதுவரை 1,451 உடல்கள் மீட்கப்பட்டு இருந்தன. 2 பேர் சிகிச்சை பெறும்போது உயிரிழந்தனர். இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,113 பேர் 21 மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தவிர திபெத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சீன ஊடக தகவல் தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/catastrophic-floods-nepal-1453-dead-tibet-43-dead-5785-missing




