சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய், சமூக வலைத்தளங்களிலும் புதிய சாதனை படைத்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை (5 மில்லியன்) கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 4 லட்சமாக மட்டுமே இருந்தது தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ முதல்-அமைச்சர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சமாக மட்டுமே இருந்தது. அவர் பதவியேற்ற பிறகு இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, தற்போது 5 மில்லியனை (50 லட்சம்) கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் சாதனை திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக மக்கள் பணியாற்றி வரும் விஜய், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பொதுமக்களுடனும், தனது கட்சி தொண்டர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அவரது அரசு அறிவிப்புகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன. ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகம் இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, 50 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijays-instagram-followers-cross-5-million




