சென்னை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி பொது விடு முறை அளிக்கப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்க ளுக்கும் அக்டோபர் 6-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-october-6-declared-a-public-holiday-chief-secretary-announces




