திண்டுக்கல், பொன்னர் சங்கர் சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்காண இந்த திருவிழா இன்று நள்ளிரவு தொடங்கியது. இதில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பெரிய பெரிய அண்டாக்களில் போட்டு சமைத்தனர். உருண்டை சாதம், கிடாக்கறி குழம்பு பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு உருண்டை சாதம் படைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் கருவறையில் மின் விளக்கை அணைத்த பின்னர் அந்த உருண்டை சாதத்தை வானை நோக்கி எரிந்தனர். இது இந்த கோவிலின் மரபாகும். பின்னர் திருவிழாவில் பங்கேறே்ற ஆண்களுக்கு இலை போட்டு உருண்டை சாதமும், கிடாக்கறி குழம்பும் பரிமாறப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் நத்தம்,குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர்,குட்டூர்,மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-unique-festival-where-only-men-participated-a-feast-of-meat-served-with-balls-of-rice




