லாஸ் ஏஞ்சல்ஸ் டி.வி. நேரலையின்போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெர்னாண்டோ வேலி பகுதியில் நார்ட்ஹாப் ஸ்ட்ரீட் பகுதியருகே மெட்ரோ பஸ் ஒன்றும், சொகுசு காரும் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. டி.வி. நிறுவனம் இதற்காக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், பஸ் விபத்து சம்பவம் தொடர்பாக படம் பிடித்து, நேரலையில் வெளியிடுவதற்காக டி.வி. நிறுவனம் ஒன்றின் ஹெலிகாப்டர் சென்றது. அது விபத்து பகுதிக்கு மேலே பறந்தபடி இருந்தது. அந்த ஹெலிகாப்டர் உதவியுடன் பஸ் விபத்து சம்பவம் பற்றி படம் பிடிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கொண்டது. அது, 2 கட்டிடங்களுக்கு மத்தியில் விழுந்து நொறுங்கியது. இதில் தரையில் இருந்த ஒருவர் பலியாகி உள்ளார். எனினும் ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர்? மற்றும் அதில் இருந்தவர்கள் பற்றிய விவரம் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை என தீயணைப்பு துறை தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான சூழல் பற்றியும் தெரியவில்லை. அதுபற்றி போலீஸ் அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/helicopter-crash-during-tv-live-three-killed




