புதுடெல்லி, வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி (33 எம்.எல்.ஏ.க்கள்), ஐக்கிய ஜன நாயக கட்சி (12 எம்.எல்.ஏ.க்கள்) பா.ஜனதா (2 எம்.எல்.ஏ.க்கள்) இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் ஐக்கிய ஜனநாயக கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜனதாவில் நேற்று இணைந்தனர். இதனால் பா.ஜனதா பலம் 10 ஆக உயர்ந்தது.ஐக்கிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு வரவேற்று பேசிய கிரண் ரிஜிஜு. "பிரதமர் மோடியின் தலைமையில் வடகிழக்கு மற்றும் மேகாலயாவின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அவர்கள் பா.ஜனதா வில் இணைந்துள்ளனர். இது வடகிழக்குக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந் தியாவுக்கும் மிகவும் முக்கியமான அரசியல் முன்னேற்றம்" என கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/eight-mlas-in-meghalaya-quit-the-united-democratic-party-and-joined-the-bjp




