சென்னை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி, பரவல் அதிகரித்துள்ள சூழலில், முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். 9 பேர் பலி காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks




