காலே, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா 462 ரன்கள் இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை 284 ரன்கள் இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா 193 ரன்கள் இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தின் 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்தியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கைக்கு 372 ரன்கள் இலக்கு இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 66 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இலங்கைக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இலங்கை தரப்பில் பெர்னான்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கைகு 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மழை பெய்துவருவதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. மழை நின்ற பின்னர் இலங்கை 2வது இன்னிங்சில் களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/first-test-india-set-372-target-for-sri-lanka




