நெல்லை, ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக திமுகவை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் முதல்-அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்தநிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளனர். சிறையில் அடைப்பதால் என்னை ஒடுக்கிவிட முடியாது. எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம். சட்டப்பேரவையில் கடுமையான எதிர்வினைகளை திமுக கொடுக்கும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-workers-ready-to-visit-a-thousand-prisons-dmk-mla-markandeyan




