தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. தவெகவின் பெரும்பான்மைக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்க, இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்தது. ஆதவ் அர்ஜுனா இந்நிலையில்தான் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”கம்யூனிஸ்ட் தோழர்கள் சில நேரம் வந்து பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் சி.எம்.டி.ஏ., டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் ஊழல் நடைபெற்றதா இல்லையா? முன்னாள் அமைச்சர்கள் பணம் வாங்கினார்களா இல்லையா? இந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களால் நெஞ்சை நிமிர்த்தி, கடந்த திமுக ஆட்சியில் ஊழல் இல்லை எனச் சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். "ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க."- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் (செப்.20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குத் திடீரென ஏன் எங்கள் மீது கோபம் என எனக்கு தெரியவில்லை. அவர் சொல்லும் இடதுசாரிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றால் இந்த அமைச்சரவையே இருக்காது. சண்முகமும், வீரபாண்டியனும் எப்போது வாபஸ் பெறுவதாகச் சொல்வார்கள் என ஆளுநர் காத்திருக்கிறார். இதனை ஆதவ் அர்ஜுனா தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை” எனப் பதிலடி கொடுத்திருத்தார். முத்தரசன் இதனைத் தொடர்ந்து நேற்று (செப்.21) செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இந்த விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். “ஊழலுக்கு எதிராக எல்லா காலங்களிலும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஊழல் செய்தவர்கள் மீது தமிழக வெற்றிக் கழகம் அரசு உறுதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். கடந்த காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு அனுமதி கொடுக்காமல் ஆளுநர்தான் நிறுத்தி வைத்திருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு அனுமதி கொடுக்காத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவும், தமிழக அமைச்சர்களும் பேசுவார்களா? உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகப் பேசுவார்களா? பேச வேண்டும்" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். தவிர சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், "புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 564, முதலமைச்சருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் எவ்வாறு வெளிவந்திருக்க முடியும். முதலமைச்சர் ஒப்புதல் அளிக்காமல் அரசாணை வந்திருந்தால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் இந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தற்போதைய த.வெ.க அரசின் அணுகுமுறை ஜனநாயகப்பூர்வமாக இல்லை. பல முக்கிய முடிவுகளைத் தன்னிச்சையாக அறிவிக்காமல், தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதே ஒரு நல்ல அரசுக்கு அழகு'' என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சர் ராஜ்மோகன் தவிர தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட மிக கொடூரமான ‘ஜெம்’ கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா, இல்லையா? இது குறித்து அவர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என கூறுயிருக்கிறார். தவெக அரசு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்திவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகம், இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு, முதல்வரின் மிசா பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து முரணுடன் இருந்து வரும் நிலையில் இந்த வார்த்தை மோதல்கள் தவெகவிற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா? என்ற கேள்வியை எழுப்புகிறது. `பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' - அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/is-there-a-rift-between-tvk-and-the-communist-parties



