கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சென்று திரும்பி வந்த 8 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு பாலியல் கொடுமை அப்பகுதியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, பள்ளி சென்றுவிட்டு வீட்டுக்குத் தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அடையளம் தெரியாத நபர், சிறுமியின் கண், வாயைப் பொத்தி அருகிலுள்ள புதருக்குள் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்த அந்தக் கொடூரன், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதபடியே வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். பதறிய பெற்றோர், உடனே தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்பு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தேன்கனிக்கோட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்தக் கொடூரத்தை செய்த குற்றவளியை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/child-sexual-abuse-shocked-krishnagiri



