திருக்காட்டுப்பள்ளி, கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணை காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கடந்த 6-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 10-ந் தேதியில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாறில் 3000 கன அடி கண்ணீர் திறந்து விடப்பட்டது. 12 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் காவிரியில் அதிகபட்சமாக 5004 கன அடியும், வெண்ணாற்றில் குறைந்த அளவாக 1508 கன அடி, கல்லணை கால்வாயில் 1500 கன அடி, கொள்ளிடத்தில் 1007 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நாற்றங்காலில் தண்ணீர் பாய்வதற்குள் முறை பாசன முறை அமல்படுத்தப்படுவதால் விவசாயிகள் நாற்று நட இயலுமா என்று கவலையில் உள்ளனர். இதற்கிடையே நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3398 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 83.92 அடியாக குறைந்தது. அணையில் இருந்து வெளியிடப்படும் தண்ணீர் 12 ஆயிரம் கன அடியாக தொடர்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-water-released-into-the-cauvery-river-from-the-kallanai




