சேலம், சேலம் புதிய பேருந்து நிலையத்தில், தவெக கட்சி கொடி நிறமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்ட 25 புதிய அரசு பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசு பேருந்துகள் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மாவட்டத்திற்கு புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள் தயார் நிலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தவெக கொடி நிறம் இந்த புதிய பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ் பகுதி சிவப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சி கொடியும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளதால், இப்பேருந்துகள் தவெக கொடி நிறத்திலேயே இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. புறநகர் பகுதிகளுக்கு இயக்கம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு இந்த புதிய பேருந்துகளை இயக்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மேலும், கடந்த காலங்களை போல இல்லாமல், இந்த பேருந்துகளில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்" என்று முழுமையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்துகளின் இந்த திடீர் நிற மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thamizhaga-vetri-kazhagam-kodi-colour-buses




