சென்னை, அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்ப சொத்துகளை காப்பாற்றிக் கொள்வதற்காக தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தால் பிறகு அந்த கட்சியில் யார் இருப்பார்கள்? இன்று அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகள் யாராவது இருக்கிறார்களா? எடப்பாடி பழனிசாமியைப் போல் தங்கள் சொத்துகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இன்று அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் நிலை இன்னும் 2 ஆண்டுகளில் தி.மு.க.விற்கு வரும். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஓரளவு கட்டி காப்பாற்றப்பட்ட தி.மு.க., இன்று ஒரு குடும்பத்திடம் சிக்கியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmks-fate-awaits-dmk-minister-nirmal-kumar




