பெங்களூரு, கர்நாடகத்தில் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கர்நாடக அரசு இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் நீர் ஆணையத்திடம் ஏற்கனவே தாக்கல் செய்தது. மேகதாது திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்ட தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித் துவிட்டது. இதனால் இந்த திட்ட பணிகளை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு மேலும் தீவிரமான முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் யோகேஷ் பய்டங்கர் கர்நாடகம் வருகை தந்து, மேகதாது அணை கட்டப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார். கோரிக்கை இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி 4 நாட்கள் பயணமாக கடந்த 31-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய நீர் ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மேகதாது திட்ட திருத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதால், தொழில்நுட்ப ரீதியான ஆய்வு பணிகளை முடித்து விரைவாக பரிசீலித்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedadu-dam-project-should-be-considered-urgently-karnataka-minister-urges-central-water-commission




