நடிகர் நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, ‘பிரேமலு’ 2-ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ பேனரில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ‘மாந்திரீகம்’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வம் மாயா’ படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. കാര്യമില്ലാതെന്റെയുള്ളിൽ മഞ്ഞുതുള്ളി വീണതെന്തിനാ. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nivin-paulys-bethlehem-kudumba-unit-film-first-single-out




