சென்னை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- துப்பாக்கிச்சூடு 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. அறிக்கை 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. நீதிமன்ற நிகழ்வு நேற்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும். அடக்குமுறை கருவி இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன. பன்னாட்டு முதலாளி சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. எந்த நியாயமும் கிடைக்காது இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதாவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்க தக்கதல்ல. குற்ற வழக்கு பதிவு எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials




