டுப்லின், அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. டாஸ் இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அயர்லாந்து முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-odi-afghanistan-opts-to-bowl




