சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. செந்தில் பாலாஜி தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. த.வெ.க. அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. முன்ஜாமீன் இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான ஆதரமும் இல்லை; பொத்தம் பொதுவாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என வாதிட்டார். இதனையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும்; வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். விரைவில் கைது? இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. செந்தில்பாலாஜி தலைமறைவு? இதனிடையே 'குதிரைபேர' வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் நேற்று செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அசோக்குமார் மட்டும் ஆஜரானார். காலையில் ஆஜரானபோது நிருபர்கள் செந் தில்பாலாஜி பற்றி அவரிடம் கேட்டபோது, 'அவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார்' என்று தெரிவித்தார். அதே சமயம் மாலையில், ஆஜராக வந்த அவரிடம், செந்தில்பாலாஜி பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'அவரை பற்றி எனக்கு தெரியவில்லை' என்று பதில் அளித்துவிட்டு போனார். எனவே செந்தில்பாலாஜி தலைமறைவாகிவிட்டாரா? அல்லது ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவை பொறுத்தே போலீசாரின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும். அதே நேரத்தில் முன்ஜாமீன் நிபந்தனைப்படி, செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதால், அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில், திருவல்லிக்கேணி போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்சஒழிப்பு போலீசாரும், சுப்ரீம் கோர்ட்டின் முடிவை எதிர்பார்த்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் கபில்சிபல், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/failed-to-appear-at-the-triplicane-police-station-has-senthil-balaji-gone-into-hiding




