புதுடெல்லி, மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியிருக்கிறது. இவ்வாறு சர்வதேச சந்தை விலை அதிகரித்தாலும் இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை மாற்றமின்றி தொடர்கிறது. இதனால் அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் இந்த மாதம் தற்போது வரையிலான சராசரி விலைப்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 வரையும், டீசலுக்கு ரூ.23 வரையும் எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வரை இழப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/oil-cos-lose-on-petrol-diesel-as-crude-crosses-100




