திருச்சி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத் தில் தற்போது, 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,454 பஸ்கள் படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், இயக்கப் 34.60 லட்சம் பேர் பயணிக்கின்றனர். வரும், 2030ல் மாநகர பஸ்களின் தேவை 7,000 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய பஸ்சில், த.வெ.க.,வின் கொடி நிறத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மாற்றப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வளைதளத்தில் நேற்று பரவியது. இதை பார்த்து பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது; ”திருச்சியில் தயாராகும், 300 பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அடுத்த மாத இறுதிக்குள் வர உள்ளன. ஏற்கனவே, பல்வேறு வண்ணங்களில் பஸ்கள் இயக்கி வருகிறோம். இந்த புதிய பஸ்களுக்கு, புதிய நிறத்தில் வண்ணம் பூசுவது தமிழக அரசின் முடிவு” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/city-buses-in-tvk-flag-colors-photo-goes-viral




