இந்தியப் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் அரசியல் ரீதியான உறவைத் தாண்டி, இருவரும் நல்ல நண்பர்கள். இந்த நட்பு இருவரின் ஒவ்வொரு சந்திப்புகளிலுமே நன்கு தெரியும். கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இருவரும் புதினின் ‘ஆரஸ் செனாட்’ காரில்தான் பயணித்தனர். அதேபோல, இன்று இருவரும் இதே காரில் பயணித்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்திருக்கிறார் புதின். இருவரும் இன்று டெல்லியில் இருக்கும் பாரத் மண்டபம் கருத்தரங்கு மையத்தில் சந்தித்துக்கொண்டனர். அதன்பின், அதே வளாகத்தில் உள்ள ‘INNOPROM தொழில் துறை கண்காட்சி’க்கு புதினின் காரில் சென்றிருக்கின்றனர். புதின் - மோடிBRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்? புதின் ஆரஸ் செனாட் காரைப் பற்றித் தெரிந்துகொண்டால், பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. புதினுக்கு ஆபத்துகள் ஏராளம் என்பது அனைவரும் அறிந்ததே. அவரைக் கொலை செய்யும் முயற்சிகளும் நிறைய முறை நடந்துள்ளன. இதனால், புதினின் பாதுகாப்பிற்காகவே ‘இது அளவு எடுத்துச் செய்த கார்’ என்றுகூடக் கூறலாம். இந்தக் காரின் சிறப்பம்சங்கள்: இந்தக் காரை எந்தப் புல்லட்டும் துளைக்க முடியாது. புல்லட் என்ன புல்லட். இந்தக் காரை ஏவுகணைகள், டிரோன்களால் கூடத் தகர்க்க முடியாது. அந்த அளவிற்குப் பக்கா பாதுகாப்பாக இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் கடலில் விழுந்தால் கூட மூழ்காது. மேலேயே மிதந்துகொண்டிருக்கும். இந்தக் காரை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வரும் வரையும் செயல்பாட்டிலேயே இருக்குமாம். அடுத்ததாக, இந்தக் காருக்குள் பயணிப்பவரைத் தாக்க எண்ணி, அனைத்து டயர்களையும் பஞ்சர் ஆக்கினால் கூட, இந்தக் கார் சூப்பர் வேகத்தில் நகரும். மேலும், எந்தக் கெமிக்கலும் இந்தக் காரை ஒன்றும் செய்ய முடியாது. ஆரஸ் செனாட்தங்கம், வெள்ளி ETF-கள் இறங்குமுகத்தில் இருக்கிறதே; முதலீட்டைத் தொடரலாமா, வேண்டாமா? 4.4 லிட்டர் இரட்டை டர்போ V8 ஹைபிரிட் எஞ்சினைக் கொண்ட ஆரஸ் செனாட், மணிக்கு 0-விலிருந்து 100 கி.மீ. வேகத்தை வெறும் 6-9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. ஆகும். பாதுகாப்பு அம்சங்கள் இவ்வளவு இருக்கிறதே. வசதி குறைவாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். அதற்கு எந்தக் குறைச்சலும் இல்லை. பிரீமியம் லெதர் இருக்கைகள், கைவினையால் வடிவமைக்கப்பட்ட மரப் பேனல்கள், கிளைமேட் கன்ட்ரோல் வசதி மற்றும் நவீனப் பாதுகாப்புத் தகவல் தொடர்பு சாதனங்களும் இந்தக் காரில் இருக்கின்றன. இவ்வளவு வசதிகள் இருக்கும் இந்தக் காரின் விலை 5.5 கோடி ரூபாய் என்று தரவுகள் கூறுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/automobile/bulletproof-blast-proof-luxury-inside-putin-aurus-senat



