சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ரெசின் ஆர்ட் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி இந்த பயிற்சியில் ரெசின் கலவை தயாரித்தல், மோல்டிங் ஊற்றுதல், டிசைனிங் செய்வது, கியூரிங் மோல்டிங் பினிஷிங் போன்ற அனைத்து விவரங்களும் கற்றுத்தரப்பட உள்ளது. இதன் வாயிலாக அழகு சாதன பொருட்கள். கீ செயின்கள், கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள் ஆகியவற்றை உருவாக்கி அதனை தொழிலாக செய்யலாம். இந்த பயிற்சியில் பங்கேற்கும் மகளிர் கட்டணமின்றி உறுப்பினராக இணைத்து கொள்ளப்படுவார்கள். மேலும் மத்திய-மாநில அரசு விவரங்கள், டிஜிட்டல் வழியாக பிசினஸ் செய்வது எப்படி? போன்றவை கற்றுத்தரப்படும். இதில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது. zoom.wewatn.com என்ற இணையதளம் வாயிலாக இணைந்து இந்த பயிற்சியில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-training-on-resin-art-on-behalf-of-the-women-entrepreneurs-welfare-associationis-being-held-today




