சென்னை, மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மின் கட்டண கணக்கீட்டு பணி தமிழகத்தில் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க தனியாருக்கு டெண்டர் விடப்போவதாகவும், இப்பணிகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே மின் உற்பத்தி, மின் கடத்தல், மின்விநியோகம், தற்போது மின்நுகர்வு கணக்கீடு என்று அனைத்திலும் தனியார்மயத்தை நோக்கியே தவெக அரசு பயணிக்கிறது. இந்த தனியார்மய முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று மின்சாரத்துறை கூறுகிறது. போதிய பயிற்சி இல்லாததால் அவர்கள் தோராயமாக கணக்கெடுக்கும் (Table reading) முறைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்படும் தவறுகளால் கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மின் கணக்கீட்டு பணிகளில் கடந்த 13 ஆண்டுகளில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட 6,591 பணியிடங்களில் தற்போது 1591 பேர் மட்டுமே பணி புரிகிறார்கள். 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டில் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 20,449 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், தற்போது அந்த அறிவிப்பிற்கு மாறாக. ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது சரியான நடைமுறையாகாது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கும், இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கும் இது எதிரானதாகும். பல துறைகளிலும் ஒப்பந்த முறை பின்பற்றப்படுவது சமூக நீதிக்கு விரோதமானது. இது அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து தனியாருக்கு தாரைவார்க்கும் செயலாகும். இனி புதிய நியமனங்கள் முழுவதும் ஒப்பந்தம் என்று சொல்வதும் கண்டனத்திற்குரியது. வலியுறுத்தல் எனவே, மின் கணக்கீட்டு பணியினை தனியாருக்கு விடும் முடிவினை உடனடியாக கைவிட்டு, நிரந்தர பணி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமெனவும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-immediately-withdraw-its-decision-to-privatize-the-electricity-tariff-calculation-system-cpim-insists




