புதுவை, சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர் தற்போது தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவருடைய சகோதரரான மரிய க்ளோத், புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசித்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக மரிய வில்சனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே, கடந்த 2022-ம் ஆண்டு தொழில் போட்டி காரணமாக மரிய வில்சன், தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடுபுகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரிய வில்சன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மரிய வில்சன் ஆஜராகாத நிலையில் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/case-regarding-the-assault-on-his-brother-court-orders-minister-maria-wilson-to-appear-in-person




