சென்னை, பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பரவும் செய்தி கேரளத்தின் வைக்கம் அருகே தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என செய்தி வெளியாகியுள்ளது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கேரள மாநிலம் ஆறுக்குட்டிப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கட்டட வெளிப்புறப்பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனினும் பணிகள் நிறுத்தப்படவில்லை. மழை நின்றவுடன் மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-circulating-about-the-suspension-of-construction-work-on-the-periyar-memorial-hall-information-verification-wing-issues-denial




