சென்னை மேயர் பிரியா சமீபத்தில் முடி வெட்டியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது குறித்து மேயர் பிரியா காட்டமாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்," ஏன் எப்போதும் நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன. பொது வாழ்வில் உள்ள பெண்ணை தோற்றம், வாழ்க்கைமுறையை வைத்து யாரும் மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியம், சுய மரியாதையுடன் வாழ உரிமை உண்டு. நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை, முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா? எனது ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகிறது. மேயர் பிரியா நான் ஒரு பெண் என்பதாலோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதாலோ இது நடக்கிறா?; மேயர் பதவிக்கு அப்பாற்பட்டு பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் " என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/mayor-priya-about-troll-in-social-media




