மெக்காய், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையே கடந்த 13ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா மிரட்டல் பந்து வீச்சு இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச வீரர்கள் ஆஸ்திரேலியாவின் மிரட்டல் பந்து வீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அணியின் தொடக்க வீரர்கள் தமீம், இஸ்லாம், கேப்டன் நஜ்முல் ஹசன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகினர். மொனிநுல் 9 ரன்னிலும், லிண்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். வங்காளதேசம் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய மெஹதி ஹசன், ஹசன் முகமது அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால், ஹசன் 11 ரன்னிலும், முகது 10 ரன்னிலும் அவுட் ஆகினர். 64 ரன்களுக்கு ஆல் அவுட் இறுதியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தைஜுல் இஸ்லாம் 11 ரன்கள் எடுத்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஸ்டார்க் அபாரம் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க் 12 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/final-test-australia-s-intimidating-bowling-bangladesh-all-out-for-64




