ஈரோடு, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16160) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக தாம்பரம் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். இதேபோல் சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16159) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூர், ஈரோடு, கோவை வழியாகமங்களூரு சென்ட்ரலை சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mangaluru-chennai-egmore-train-service




